Actress Rohini’s unbelievable transformation for Arav starrer “Market Raja MBBS”

ஆகச் சிறந்த நடிகைகளில் இவருக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு!
'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்'திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் பட்டாளம் சுந்தரிபாய் பாத்திரத்தில் நடிக்க,அவருக்கு நேரெதிரான லதாம்மா என்ற காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அன்னை வேடத்திற்காக ரோகிணி அவர்களை அணுகினேன்.

அவரிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை அந்த லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்.அவருடனான உரையாடல்கள்,காட்சி விவரங்களைக் கூட அதன்பின் சைகை மொழியிலேயே என்னை சொல்லப் பணித்தார்...

கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருடன் பயிற்சிப் பட்டறையாக அது விரிவடைந்தது.

படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி புரியும் ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணை எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரோகிணி!

ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் காட்சி முடிந்தவுடன் கூட அவர் அதிலிருந்து சகஜ நிலைக்குத் திரும்ப பல மணி நேரம் பிடித்தது!

படத்தை திரையில் காணும்போதும் பார்வையாளர்கள் அதேவிதமான உணர்ச்சிக்கு ஆட்படுவார்கள் என்பது ஒரு இயக்குனராக என் அசைக்கமுடியாத நம்பிக்கை!

Comments