மில்லியன் பார்வைகளை கடந்த “ஓ மை கடவுளே” டீஸர் !



காதல் எக்காலத்திலும் மாறாத உணர்வு. எப்போதும் உலகின் ஆதாரமாக, புதுமையாக உலகின் இயக்கமாக

 இருப்பது காதல் தான். சினிமாவில்  எக்காலத்திலும் காதல் கதைகளுக்கு பெரும் வரவேற்பு இருந்து

 வருகிறது.  தமிழில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஃபிரஷ்ஷான, இளமை ததும்பும் காதல் கதையாக

 உருவாகியுள்ளது “ஓ மை கடவுளே” படம். அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும்.


 இத்திரைப்படம் இதில் இணைந்திருக்கும் மற்ற நடிகர் பட்டாளத்தால் மேலும் மேலும் எதிர்பார்ப்பை 

குவித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வாணி போஜன், சாரா இணைந்திருக்கும் இப்படத்தில் 

அனைவரையும்  ஆச்சர்யப்படுத்தும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு சிறிய பாத்திரத்தில் 

நடித்துள்ளார். 

காதல் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர்  சமீபத்தில் வெளியாகி,  ரசிகர்களிடம் பெரும்

 வரவேற்பு பெற்று வெளியான  குறைந்த காலத்திலேயே மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை 

புரிந்திருக்கிறது. 


இது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியதாவது...


முதல் படம் இயக்கும் எந்த ஒரு இயக்குநருக்கும் தனது படத்தின் முதல் பார்வையை அறிமுகப்படுத்துவது, 

வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் பரவச மனநிலையில் தான் இருக்கும். ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்ள

 போகிறார்கள் எனும் பரிதவிப்பு இருந்துகொண்டே இருந்தது. இப்போது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு 

எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாங்கள் வேலையை சரியாகச் செய்துள்ளோம் என்ற 

நம்பிக்கையை அளித்திருகிறது. படத்தை பார்க்கும்போது ரசிகர்கள் உற்சாகமான காதலை காமெடியுடன் 

கொண்டாடுவார்கள் இப்படம் அனைவரையும்  எளிதில் கவரும். மிக விரைவில் முழுமையான டிரெய்லர்

 மற்றும் இசை ஆல்பத்துடன் ரசிகர்களை சந்திப்போம் என்றார். 


தயாரிப்பாளர் G டில்லி பாபு Axcess Film Factory சார்பில் அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோரின் 

Happy High  Pictures  உடன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார். லியான்  ஜேம்ஸ் இப்படத்திற்கு 

இசையமைத்துள்ளார்.   மேயாத மான், எல் கே ஜி படப்புகழ் விது அயன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Comments