சர்வதேச அளவில் அரசு மற்றும் துறைசாரா நிதி தொடர்பான விஷயங்களை கவனிக்க, 1938ம் ஆண்டில் நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்ட சர்வதேச நிதி கழகம் என்ற ஒரே ஒரு அமைப்பு தான் இன்றளவும் செயல்பட்டு வருகிறது.
இந்த கழகத்தின் 13வது வருடாந்திர வரி மாநாடு, இரண்டு நாள் நிகழ்ச்சியாக சென்னை தாஜ் கன்னிமராவில் வருகின்ற நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. ஜமைக்கா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மேதகு நீதிபதி திரு. பைரன் ஸ்கைக்ஸ் அவர்கள் நவம்பர் 15ம் தேதி (வெள்ளிக்கிழமை )காலை 09.00 மணி அளவில் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, அதனைத் தொடர்ந்து இந்திய வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர், நீதியரசர், மேதகு திரு. பி பி பட் அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் இத்துறைசார் சிறப்பு வல்லுனர்கள், சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்றவிலை குறித்த தமது அனுபவங்களையும், புரிதல்களையும் பல்வேறு தரப்பட்ட சமகால தலைப்புகளின் கீழ் வழங்கவிருக்கிறார்கள்.
சர்வதேச நிதிக் கழகத்தின் இந்திய கிளையின், தெற்கு பிராந்திய அத்தியாயம் சென்னை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இக்கழகத்தின் சென்னை அத்தியாயம் இந்திய மற்றும் பிற நாடுகளின் கண்ணோட்டத்திலிருந்தும், இந்திய பொருளாதாரம் மற்றும் வரிவிதிப்புக் கொள்கைகளின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த கல்வித் திட்டங்கள் மற்றும் ஊடாடும் மாநாடுகளை நடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த 12 ஆண்டுகளாக வருடாந்திர மாநாடுகளை ஏற்பாடு செய்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சி சென்னை மற்றும் தென்னிந்தியாவில் சர்வதேச வரிவிதிப்பு தொடர்பான முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. செயல்திறன் கொண்ட சிறந்த நிர்வாகத்தை அடைவதற்கு இந்த நடவடிக்கைகளின் மூலம் புதிய யோசனைகள் மற்றும் வரிக் கொள்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்

Comments
Post a Comment