நடிகர் கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது "ஜடா" படம்.
கால்பந்தாட்ட போட்டிகளில் ஆறுபேர் கொண்ட அணிகள் விளையாடும் விளையாட்டைப்பற்றியும் அதைச்சுற்றியும் நடக்கும் கதை விறுவிறுப்பான கதையாக வந்திருக்கிறது. வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இப்படத்தின் டீசரை இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்ததோடு பெரும் வரவேற்பைத்தந்தது படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
படத்தின் இசையமைப்பாளர் சாம் CS இசையமைப்பில் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் விரைவில் வெளியிட இருக்கும் படக்குழுவினர் பாடலும் , படமும் சிறப்பாக வந்திருப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக கூறுகின்றனர்.

Comments
Post a Comment