தாராள பிரபு திரைப்படம் - விமர்சனம்



மதிப்பு - 3.7/5

விக்கி டோனர்’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்தான் தாராளபிரபு..

கால்பந்து விளையாடுவதில் ஆர்வமுள்ள நாயகன் பிரபு கோவிந்த் (ஹரிஷ் கல்யாண்) ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நல்ல வேலை வாங்கி செட்டில் ஆகவேண்டும் என நினைக்கிறார். தன் அம்மாவும், பாட்டியும் தான் உலகம் என இருக்கும் பிரபுவின் உலகில் நுழைகிறார் ஹீரோயின் நிதி மந்தனா (தன்யா ஹோப்). இதனிடையே ஒரு வழியாக பிரபுவை தேடி பிடித்து அவரை, விந்தணு டோனராக சம்மதிக்க வைக்கிறார் டாக்டர் கண்ணதாசன். காதலி நிதி மந்தனா தான் ஒரு விவகாரத்து ஆனவள் என்று தன் கடந்த கால வாழ்க்கையை பற்றி கூறுகிறாள். அதே நேரத்தில் பிரபு கோவிந்த் தான் ஒரு விந்து தானம் செய்பவர் என்பதை வெளிப்படுத்த வெட்கப்பட்டு மறைக்கிறார்.
இந்நிலையில், தன்யாவிற்கும் ஹரீஷ் கல்யாணுக்கும் திருமணம் நடக்கிறது. தன்யாவிற்கு குழந்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிகிறார்கள்.
இறுதியில் பிரச்சனை முடிந்து இருவரும் ஒன்றுசேர்ந்தார்களா? அது என்ன பிரச்சனை? என்பதே படத்தின் மீதிக்கதை.
கால்பந்து விளையாட்டு வீரனாகவும், தாய்க்கு மகனாகவும், பாட்டிக்கு பேரனாகவும், மருத்துவர் கண்ணதாசனிடம் சிக்கித் தவிக்கும் அப்பாவி டோனராகவும், காதலனாகக் கணவனாக தனது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி சிறப்பாகவே நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். படத்தின் மிகப்பெரிய கதையோட்ட நாயகன் விவேக் தான்! விவேக் ஹரிஷ் கல்யாண் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. நடிகர் விவேக்கும் ஹரிஷ் கல்யாணும் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்கள். சென்டிமென்ட் காட்சிகளில் கூட தான் தேர்ந்த நடிகன் என்பதை நிரூபிக்கிறார்.

தான்யா ஹோப் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தன்னைப் பற்றிச் சொல்லிவிட்டு ஹரிஷின் பதிலுக்காக காத்திருக்கும் அந்த தருணத்தை அழகாக வெளிப்படுத்துகிறார். ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக அனுபமா, பாட்டியாக சச்சு, சிவாஜி உட்பட ஏனைய கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்குப் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
விந்தணு முக்கியத்துவத்தையும், தாம்பத்திய வாழ்க்கையின் ஆரோக்கியத்தையும் சொல்லும் விதமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து. ரீமேக் படம் என்றாலும் அதை சிறப்பாக எடுக்க திறமை வேண்டும். அதை அனைவரும் பாராட்டும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆபாசம் இல்லாமல் திரைக்கதை உருவாக்கி இருக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபீர் வாசுகி, மேட்லி புளூஸ், ஓர்கா, சான் ரோல்டன், விவேக் மெர்வின் என பலர் இசையமைத்திருக்கிறார்கள். இவர்கள் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

Comments