“ஆர் மாதவன் மற்றும் ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் எங்கள் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாறா' திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் கொரோனா நோய் பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே முடிவடைந்துவிட்டது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மிக விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் துவங்க உள்ளன. தற்போது, கொரோனா நோய் பரவல் தீவிரமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகள் அனைத்தும் கண்டிப்பாக மிகச் சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறும். படக்குழுவினரின் பாதுகாப்பே எங்களது முதன்மை குறிக்கோள்” என்று கூறியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிஞர் தாமரை பாடல்களை எழுதியுள்ளார். சீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். பிரபலமான பல விளம்பர படங்கள் மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்ற ‘கல்கி' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
“அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மிகப்பெரும் தமிழ் சினிமா ஆளுமைகள் இப்படத்தின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுளளனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்”

Comments
Post a Comment