நடிகை மஞ்சிமா மோகனின் திறமை வாய்ந்த நடிப்பு அவரது அனைத்து படங்களிலும் கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது. மிககுறுகிய கால திரைப்பயணத்தில் அவர் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறியிருக்கிறார். சமூக வலைதளங்களில் மிக இயல்பாக ரசிகர்களுடம் பழகும், அவரது பண்பு, அவருக்கு உச்ச எண்ணிக்கையில் ரசிகர்களை பெற்றுத்தரும் ஒரு காரணியாக இருக்கிறது. தற்போது அவர் தனித்துவமிக்க ஒரு புதிய பயணத்தில், நல்ல திறமைகளை ஊக்கம் தந்து முன்னிறுத்தும் “ஒன் இன் எ மில்லியன்” (பத்து லட்சத்தில் ஒருவர் - one in a million) எனும் தளத்துடன் வந்திருக்கிறார்.
இது குறித்து நடிகை மஞ்சிமா மோகன் கூறியதாவது...
நான் “ஒன் இன் எ மில்லியன்” (பத்து லட்சத்தில் ஒருவர் - one in a million) தளத்தை, மிகச்சிறந்த திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு தான் ஆரம்பித்தேன். இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன்னர் நான் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தேன். இதில் நடத்தப்படும் போட்டிகள் வழக்கமானதாக இருக்ககூடாது என்பது தான் அது. அதற்கு பதிலாக இந்த தளம் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் குழுமமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இக்குழுமத்தில் திறமையாளர்கள் கைவினை செயல், நடனம், இசை, பாடல் என தங்கள் திறமைகளை, பதிவேற்றி பாராட்டுக்களை பெறலாம். இந்த தளம் ஓர் இரவில் நடந்த மாற்றம் கிடையாது. எனது கல்லூரி நாட்கள் முதலாகவே இந்த தளம் பற்றிய எண்ணம் என் மனதில் இருந்தது. உலகமே எதிர்மறைதன்மையில் இயங்கும் இந்த சூழலில் அனைவரிடத்திலும் நேர்மறைத்தன்மையை வளர்க்க இந்த ஏற்பாடு மிகச்சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். இச்சூழல் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் இதனை தொடர்ந்து நடத்துவேன் “ஒன் இன் எ மில்லியன்” (பத்து லட்சத்தில் ஒருவர் - one in a million) தளத்தின் மிக முக்கிய குறிக்கோள் வயது வரம்பின்றி அனைத்து திறமைகளையும், அனைவரையும் பங்கு கொள்ள வைப்பதே ஆகும்.
Note: We have attached the images of the talents which One in a Million received and also few images of Ms.Manjima Mohan
Thanks & Regards
Team D'One

Comments
Post a Comment