10 ஜூன் 2019
அன்றைய தினம் ஒரு கறுப்பு தினம். தமிழ்த்திரையுலகு, நாடக மேடை இரண்டும் கால்நூற்றாண்டுக்கு
மேலாக, தமக்கு நகைச்சுவை சுவாசம் தந்த எழுத்தாளர், நடிகர் கிரேஸி மோகனை இழந்து விட்ட நாள்
காற்றில் நகைச்சுவையை தமது வசனத்தால் இழையவிட்ட கிரேஸி மோகனின் மூச்சு காற்றில் கரைந்து
போன நாள்.
1952-ல் பிறந்த மோகன், பொறியியல் இயந்திரவியல் படித்த போது, " Great
bank robbery" என்ற நகைச்சுவை நாடகத்தை கல்லூரி விழாவுக்காக எழுதி மேடையேற்றி பரிசு பெற்றார்.
1976-ம் ஆண்டு எழுதி மேடையேற்றிய
" Crazy thieves in palavakkam" இவருக்கு " Crazy" என்ற பெயரை நிரந்தரமாகப் பெற்றுத்தந்தது .1979-ல் " க்ரேஸி
க்ரியேஷன்ஸ்" என்ற சொந்த நாடகக் குழுவினைத் தொடங்கி
பல்லாயிரம் மேடைகளில் நாடகங்களை நடத்திவந்தார். க்ரேஸி க்ரியேஷனின் " சாக்லெட் கிருஷ்ணா" நாடகம்
மட்டுமே உலகெங்கிலும் ஆயிரம் மேடைகளில் அரங்கேறியது.
உலகெங்கிலும், 6500 மேடைகளுக்கு மேல் கரேஸி க்ரியேஷனின் நாடகங்கள் அரங்கேறி இருப்பது ஒரு
நிகழ்கால சாதனை.
அவர் அழகான வண்ணமிகு ஓவியங்கள் வரைவதிலும், வெண்பா இயற்றுவதிலும் விற்பன்னராக இருந்தது
பலரும் அறியாதது.
அங்கத வார்த்தை விளையாட்டு, ஒற்றைவரி
நகைச்சுவை, உடனடி பதில் போன்றவைகளில் பாண்டித்யம் கொண்டிருந்தார். ட்விட்டர் அறிமுகமான
நாட்களுக்கு முன்னரே இவர் " ஒரு வரி" ட்வீட்களின் மன்னராக இருந்தார். நம்முள் இருக்கும் பத்துவயது
சிறுவனை
உயிர்ப்பித்துவிடுகின்ற அதிசயத்தை அவரது நாடகங்கள் தொடர்ந்து நிகழ்த்துகின்றன. 1989-ல்
உலகநாயகன் பத்மபூஷன் கமல்ஹாசனின் " அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் தொடங்கிய பயணம், பஞ்ச
தந்திரம்,
பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், தெனாலி உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து அவரது உச்ச
நகைச்சுவை வசனங்கள் வெளிப்பட்டு மிளிர்ந்திருக்கும். மேலும் உலகநாயகனின் பெருவெற்றிப்படங்களான
அவ்வை ஷண்முகி, வசூல் ராஜா MBBS, மைக்கெல் மதன காமராஜன் ஆகிய திரைப்படங்களிலும் க்ரேஸியின்
பேனாவின் சிலம்பாட்டத்தை நாம் உணரலாம். பல படங்களில் நல்ல நகைச்சுவை, குணச்சித்திர நடிகராகவும்
அவர் நமது மனங்களைக் கவர்ந்துள்ளார்.
மக்களை நகைச்சுவை வழியே சிரிக்க, மகிழச் செய்வதே க்ரேஸி மோகனுக்கான உண்மை நினைவேந்தலாக
இருக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு, தற்போதைய COVID -19 ஊரடங்கில், மக்கள் விட்டங்கி
இருக்கும் சூழலில் டோக்கியோ தமிழ்ச்சங்கம், க்ரேஸி க்ரியேஷனுடன் இணைந்து க்ரேஸி மோகனுக்கான
நேரலை, சிறப்பு நினைவேந்தல் நிகழ்வை வரும் 10.ஜூன் 2020 அன்று பத்மபூஷன் திரு கம்ஹாசன்
அவர்களின் முன்னிலையில் பெருமையுடன் வழங்கவிருக்கிறது.
ஒரு எளிய, புனிதமான மனிதரின் ஓராண்டு நினைவுநாளை சிறப்பிக்க உலகெங்கிலும் உள்ள 25-க்கும்
மேற்பட்ட தமிழ் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் தமது கரங்களை
இணைத்திருக்கின்றன. பல்வேறு சமூக வலைத்தளங்களில் நேரலையில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்வில்,
திரைக்கலைஞர்கள் நாசர், பிரபு கணேசன், குஷ்பூ கே எஸ் ரவிகுமார், சந்தானபாரதி, முனைவர்
கு.ஞானசம்பந்தன் ஆகிய
பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வு வடிவம் பெற்று அரங்கேற க்ரேஸி க்ரியேஷனின் மாது பாலாஜி அதன்
அங்கத்தினர், நடிகர் நாசர், மற்றும் டோக்கியோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஜி.ஹரிநாராயணன் மற்றும்
அங்கத்தினர் அனைவரின் முன்னெடுப்பும், முனைப்பும் காரணம்.
இந்நேரலை நிகழ்வில், துபாய்
பொன்மாலைப் பொழுது நண்பர்கள் குழுமத்தின் படைப்பாக்கத்தில், டோக்கியோ தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில்
" க்ரேஸி மோகன்-சிறப்பு
நினைவுப் பாடல்" ஒன்று க்ரேஸியின் நீண்டகால நட்புறவு
உலகநாயகனால்
வெளியிடப்படவிருக்கிறது.
க்ரேஸி க்ரியேஷனின் கடந்த கால பணிகளை சிறப்பு செய்து, க்ரேஸி மோகனின் வழித்தடத்தில் தொடரும்
நாடகப் பணியையும் வாழ்த்து கூறி பாராட்டி, டோக்கியோ தமிழ்ச்சங்கம் சிறப்பு செய்ய இருக்கிறது.
இவ்வுலகில் பல்லாயிரம் மோகன்கள் வரலாம், வாழலாம். ஒரே ஒரு க்ரேஸி மோகன் மட்டுமே அது
அவரது திறமையால், எழுத்தால், நாடகத்தால், திரைப்படத்தால் ... அவற்றில் அவராற்றிய பணியால்
மட்டுமல்ல!
அவர் வாழ்ந்து சென்ற விதத்தால் ...
அவர் காட்டிச்சென்ற மனிதத்தால் ...
=== என்றும் வாழ்க அவர்தம் புகழும், பெருமையும் ====
Long Live his legacy!

Comments
Post a Comment